Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடுகளை இழந்த எம்.பிகளுக்கு வாடகை வீடுகள்

வீடுகளை இழந்த எம்.பிகளுக்கு வாடகை வீடுகள்

நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஏற்பட்ட அமைதியின்மையால் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கலல்கொடவில் உள்ள வியத்புர வீடமைப்புத் திட்டத்தில் அவர்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வீடுகள் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அதில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மாத வாடகை வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த வளாகத்தில் 106 வீடுகள் உள்ளதாகவும் வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவைப்பட்டால், அந்த வீடுகளில் வசிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கலாம் என்றும் அவர்களது நிரந்தர வசிப்பிடமாக அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles