10,000 அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் கையிருப்பில் வைத்திருக்க இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய ரூபா இலங்கையின் உத்தியோகபூர்வ நாணயமாக இல்லாவிட்டாலும் இந்திய ரூபாவை இலங்கையின் வெளிநாட்டு நாணயமாக நியமிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்திய மத்திய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முடிவு இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் இந்திய ரூபாவை பிரபலப்படுத்துவதன் மூலம் டொலரை சார்ந்திருப்பதை குறைக்க முடியும் என்ற இந்திய மத்திய அரசின் முயற்சிகளில் இது ஒரு படியாகும்.