13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பரிந்துரைப்பதற்கும், ஒப்பந்த சேவைக் காலத்தில் பணியகத்தின் பதிவு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நபர்களைக் கவனிப்பதற்கும், பணியிடத்தில் ஏதேனும் பிரச்சினையான சூழ்நிலை ஏற்பட்டால், அதைப் பற்றி அறியவும் சேவை ஒப்பந்த விதிமுறைகளை மீறாத வகையில் தேவையான நிவாரணம் வழங்கவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும், அந்த நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப தலையிட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பொறுப்புகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது