கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இருந்து ஆண் ஒருவரும் ஹெக்கித்த பிரதேசத்தில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் 44 மற்றும் 34 வயதுடைய தல்கஸ்வத்தை, பொரலஸ்கமுவ மற்றும் வத்தளை ஹேக்கித்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இருவரும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.