இலங்கை மின்சார சபையினால் மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார கட்டண பட்டியலுக்கு பதிலாக, சிறிய ரக பற்றுச்சீட்டொன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் சில பகுதிகளில் இந்த சிறிய ரக மின்சார கட்டண பற்றுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய மின்சார கட்டண பட்டியல் அச்சிடப்படாமையினால், தற்காலிகமாக சிறிய ரக பற்றுச்சீட்டு மின் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.