போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசு ஊழியர்களுக்கு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளுக்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்வு வழங்குவதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் ஆர். எச். எஸ். சமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
கடன் வட்டி அதிகரிப்பினால் தவணை செலுத்த முடியாமல், அதிக பணம் செலவழித்து வாழ முடியாமல், போக்குவரத்துக் கட்டண உயர்வால் பஸ்களில் வேலைக்குச் செல்ல முடியாமல் அரச ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அரச ஊழியர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகாமையில் அலுவலகத்தில் பணியாற்றுவதற்கான சூழலை அமைத்துக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.