முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியமைக்காக செலுத்த வேண்டிய 60,000 ரூபாவை சிவில் விமான சேவைகள் அதிகார சபை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இந்த சேவை வழங்கப்பட்டாலும், கடந்த வியாழன் அன்று அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டமை ஒரு சிறப்பு நிகழ்வாகும்.
பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து வருகை தந்த பின்னர் அவரை வரவேற்க வந்தோருக்கு வழங்கப்பட்ட உணவுகளுக்காகவும் சேவைக்காகவும் இந்த பணம் செலுத்தப்பட்டது.
