கண்டி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் 48 இலட்சம் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தினால் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் கிரிஎல்ல எம்.பி தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற அவர், இந்த மின்வெட்டு காரணமாக சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அந்த வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் ரேடியன்ட் சிகிச்சை முன்னெடுக்க முடியாமல் இருப்பதாகவும், நோயாளர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
இந்த விடயத்தை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடமும் அறிவித்ததாக அந்த வைத்தியர் குறிப்பிட்டதாக என லக்ஷ்மன் கிரிஎல்ல எம்.பி கூறினார்.
எனினும், குறித்த வைத்தியசாலையில், மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறுவதை தான் மறுப்பதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன தெரிவித்தார்.