Friday, November 15, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள புதிய நடைமுறை

ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள புதிய நடைமுறை

இனி தேசிய கல்வி பல்கலைக்கழகத்தில் 4 வருட காலம் பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரமே பாடசாலைகளில் கற்பிக்க அனுப்பப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நேற்று (24) நாடாளுமன்ற அலுவல்கள் ஆரம்பமான போது விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஆசிரியர் சேவைக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கு 2 வழிமுறைகள் உண்டு.

பின்தங்கிய பிரதேசங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக டிப்ளோமா பட்டங்களை பெற்றவர்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை மாற்று முறையில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

19 கல்வியல் கல்லூரிகளை ஒன்றிணைத்து தேசிய கல்வி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

இதில் 4 வருட காலம் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்ற பின்னரே பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவர்.

செயல்திறன் மிக்க சிறப்பான ஆசிரியர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles