Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிள்ளையின் பாடசாலைக்கு முன்பாக மனைவியின் உயிரை பறித்த நபர்

பிள்ளையின் பாடசாலைக்கு முன்பாக மனைவியின் உயிரை பறித்த நபர்

பொல்பித்திகம – தல்பத்வெவ கல்லூரிக்கு அருகில் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

குறித்த பெண் இன்று (24) காலை தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்று விடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தினுஷிகா மதுஷானி தென்னகோன் என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் மற்றும் உயிரிழந்த பெண் ஆகிய இருவரும் திருமண பந்தத்திலிருந்து பிரிந்தவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles