Friday, November 15, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸுக்கு விசேட சேவையாற்றிய 'லிஸ்டா' காலமானது (Photos)

பொலிஸுக்கு விசேட சேவையாற்றிய ‘லிஸ்டா’ காலமானது (Photos)

300க்கும் மேற்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு உதவிய காலி பொலிஸின் நாய் லிஸ்டா உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனையில், அது சிறுநீரக கோளாறு காரணமாக நாய் இறந்தது தெரியவந்தது.

லிஸ்டா என்றழைக்கப்படும் குறித்த நாய் 2017 இல் நெதர்லாந்தில் பிறந்தது. பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு போதைப்பொருள் நடவடிக்கைகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு 2019 இல் காலி பொலிஸில் நியமனம் பெற்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் விசேட நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டுள்ளது.

நாய் சம்பந்தப்பட்ட நூற்றி நான்கு சோதனைகள் வெற்றியடைந்துள்ளதுடன், தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளின் போது, நீண்டகாலமாக அவற்றை மோப்பம் பிடித்ததால் லிஸ்டாவின் சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கியுள்ளன.

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு விசேட சேவையாற்றிய இந்த நாயின் உடல் நேற்று காலி பொலிஸ் பிரிவில் பொலிஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles