கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரின் கடமைக்கு முன்னாள் அமைச்சர் நவின் இடையூறு செய்ததாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
குறித்த வீட்டில் பாரியளவு மின்கட்டண நிலுவை இருப்பது தொடர்பில் பல தடவைகள் அறிவித்த போதும், கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்க ஊழியர்கள் சென்றதாகவும், இதன்போது முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அவர்களின் கழுத்தைப் பிடித்து வெளியே துறத்தி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (23) பிற்பகல் மின் ஊழியர்கள் அங்கு சென்ற போது, வீடு பூட்டி கிடந்துள்ளதாக ஜனக்க ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.