Monday, May 18, 2026
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுசாமிக்க கருணாரத்னவுக்கு தடை

சாமிக்க கருணாரத்னவுக்கு தடை

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு ஆண்டு கால கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20க்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது அவர் கிரிக்கட் வீரர்களுக்கான உடன்படிக்கையை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக 3 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு உரிய தண்டனையை வழங்குமாறு அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்படி ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு, சகல வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க அவருக்கு ஒரு வருடத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், 5000 அமெரிக்க டொலர்கள் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles