ஆசிரியைகள் புடவையை தவிர வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு கடமைக்காக வர முடியாது என பொதுநிர்வாக அமைச்சு இன்று (23) சுற்றறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பல பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியைகள் புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் கடமை நிமித்தம் பாடசாலைகளுக்கு வரும்போது புடவை உடுத்தியே வரவேண்டும் எனவும்இ அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கல்வி அமைச்சு கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.