Monday, March 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்க அரசுக்கு அதிகாரம் இல்லை - சஜித் பிரேமதாஸ

இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்க அரசுக்கு அதிகாரம் இல்லை – சஜித் பிரேமதாஸ

இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனைச் செய்ய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

நஷ்டமடைந்து வரும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் கலந்துரையாட முடியும். எனினும் இலாபமீட்டும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், டெலிகொம் ஆகிய நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் இல்லை.

இது தொடர்பில் அரசாங்கம், பதில் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அரசாங்கம் ஏன் இந்த முடிவை எடுத்தது என்பது கேள்வியாக உள்ளது.

இந்த முடிவைப் பார்க்கும்போது, தேர்தலை பிற்போடும் திட்டம் உள்ளதாகவே கருதவேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles