Wednesday, May 21, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதி அனுமதிப்பத்திரங்களில் புதிய மாற்றம்

சாரதி அனுமதிப்பத்திரங்களில் புதிய மாற்றம்

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

சாரதிகளுக்கான குறைபாட்டுப் புள்ளி முறைமை ஒன்று அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்கீழ் குறித்த சாரதி புரிகின்ற ஒவ்வொரு வீதியொழுங்கு மீறல்களுக்கும் குறைபாட்டுப் புள்ளிகள் வழங்கப்படும்.

இவ்வாறு 24 குறைபாட்டுப் புள்ளிகளைப் பெறுகின்ற சாரதிகளது சாரதி அனுமதிபத்திரம் குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தப்படும்.

அவர் மீண்டும் புதிய சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வீதி விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடைமுறை அமுலாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles