தரமற்ற பூச்சி கொல்லிகள் மற்றும் களைகொல்லிகளை விநியோகிக்கும் விற்பனை நிலையங்களை சோதனை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில், இலங்கைக்கு விவசாய இரசாயனப் பொருட்களை விநியோகிக்கும் முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்கு தரம் குறைவான பூச்சிகொல்லி மற்றும் களை கொல்லிகளை அதிக விலைக்கு விற்று விவசாயிகளின் பணத்தை சிலர் திருடுவதாக விவசாய இரசாயன இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
தரமற்ற இரசாயனப் பொருட்களால் பல சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பூச்சிகொல்லி மற்றும் களை கொல்லிகளை பயிர்களுக்கு பயன்படுத்தும்போது பரவியதால் 54 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.