பண்டாரநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டு, சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் வளர்க்கப்பட்டு, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மேலும் கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தற்போதைய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவால் அழிக்கப்பட்டுள்ளதாக குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று கட்சியில் இருந்து தற்காலிகமாக விலகியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளால் கட்சியில் யாரும் மிஞ்ச மாட்டார்கள்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.