Friday, July 18, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவஜிர அபேவர்தனவின் டெலிகொம் மோசடி

வஜிர அபேவர்தனவின் டெலிகொம் மோசடி

டெலிகொம் நிறுவனம் நஷ்டம் ஈட்டுவதாகவும், அதனை விற்காவிடின், மக்களுக்கு உணவு கிடைக்காது எனவும் ஜனாதிபதியும் வஜிர அபேவர்தனவும் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மட்டும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளுக்காக 2000 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

நேரடி மற்றும் மறைமுக வரியாக 19.3 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சொத்துக்கள் தற்போது 400 பில்லியனை நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் பெற வேண்டிய பெரும் தொகையை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வஜிர அபேவர்தனவுக்கு சொந்தமான காலி வீட்டின் இலட்சக்கணக்கான பெறுமதியான டெலிகொம் கட்டணம் செலுத்தப்படவில்லை என நிரோஷன் பாதுக்க சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles