Tuesday, March 18, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

டயனாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தகுதியற்றவர் என கூறி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் ஒசந்த லக்மால் அனில் ஹேரத் தாக்கல் செய்த இந்த மனு, இன்று நீதியரசர்கள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே உட்பட அனைத்து பிரதிவாதிகளுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்ப நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.பிரதிவாதிகள் முன்னிலையில் மனுதாரர்கள் கோரும் உரிய உத்தரவினையும் நிவாரணத்தையும் வழங்குவது பொருத்தமானது என்று கருதுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட 15 பேர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles