Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்க டொலரின் பெறுமதியை குறைக்க வழி சொல்கிறார் வஜிர

அமெரிக்க டொலரின் பெறுமதியை குறைக்க வழி சொல்கிறார் வஜிர

வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 360 ரூபாவுக்கு கீழே கொண்டு வர முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன MP தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வர்த்தகங்களை காப்பாற்ற தற்போதைய பாரிய வட்டி விகிதங்கள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நிதி அதிகாரங்களைக் கொண்ட நாடாளுமன்றம் கட்டுப்படுத்தி வட்டி விகிதங்களுக்கு வரம்பை விதிக்க வேண்டும்.

வட்டி விகிதங்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் உள்ளூர் வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வேலைகளை இழக்கத் தொடங்குவார்கள் மற்றும் நாட்டில் வறுமை நிலைகள் வேகமாக உயரும் என்பதால் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூர் வர்த்தகங்கள் உதவியுள்ள அதேவேளை நாட்டின் வீழ்ச்சிக்கு ஒருசில நிறுவனங்கள் பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கங்கள் அடிபணியக் கூடாது எனவும், இலங்கை மக்களின் நலன்களுக்காக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.எனவே நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்வதற்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கும் ஜனாதிபதிக்கும் அவரது கொள்கைகளுக்கும் ஆதரவளிக்குமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles