உலகின் இரு சிறந்த விஞ்ஞானிகளாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹோக்கிங் ஆகியோரை விட IQ அளவை கொண்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி தொடர்பில் இங்கிலாந்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அரியானா ஹிமால் தர்மசேன என்ற 10 வயதான சிறுமி இந்த சாதனையை படைத்துள்ளார்.
மேலும் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழில், மென்சா நுண்ணறிவு பரீட்சையில் 162 புள்ளிகளை பெற்றுள்ளார்.
குறித்த பரீட்சையில் அவரின் பெறுபேறு ‘மேதை’ மட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தத் திறமையின் காரணமாகவே அவருக்கு மென்சா உயர் புலனாய்வுக் கழகத்தின் அங்கத்துவம் கிடைத்துள்ளது.
