Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றிடம் மன்னிப்பு கோரினார் பொலிஸ்மா அதிபர்

நீதிமன்றிடம் மன்னிப்பு கோரினார் பொலிஸ்மா அதிபர்

பொய்யான சாட்சியங்களை உருவாக்கி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சுதத் மெண்டிஸை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அந்த உத்தரவை பின்பற்றாமைக்கு தான் நிபந்தனையற்ற மன்னிப்பை தெரிவிப்பதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பொலிஸ் பரிசோதகருக்கு நிலுவை சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்கப்படுமெனவும் பொலிஸ் மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.சுரேராஜா, பிரியந்த ஜயவர்தன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பொலிஸ் மா அதிபர் நேற்று(16) உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles