இங்கிரிய பிரதேச பௌத்த விவகார இணைப்பாளர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு வந்து செல்லும் சிலர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால் நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.