Tuesday, May 20, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனி அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் ஒன்லைன் முறையில்

இனி அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் ஒன்லைன் முறையில்

அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் 2024 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மார்ச் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் மின்னணு முறையில் (ஒன்லைன்) வழங்குவதை கட்டாயமாக்க தான் முன்மொழிவதாகவும், அந்தந்த பெறுநர்களுக்கான பண மானியங்கள் மற்றும் பொதுமக்களால் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதற்கான கொடுப்பனவுகள் உட்பட அனைத்தும் அதற்குள் அடங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி, அனைத்து அரச நிறுவனங்களும் அந்தச் சேவைகளுக்கான ஒன்லைன் கட்டணங்களைச்
செயற்படுத்தும் திட்டத்தைத் தயாரிக்கவும், தேவையான சட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாகஇ தற்போது அமைச்சுக்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப சேவை அதிகாரிகளிடம் தேவையான உதவியை நாட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2023 வரவு செலவுத் திட்டத்தில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles