நிலவை ஆய்வு செய்வதற்கான நாசாவின் ஓரியன் விண்ணோடம் புளோரிடாவிலிருந்து இன்று அதிகாலை செலுத்தப்பட்டது.
நாசாவின் வலுமிக்க ரொக்கட்டான ஆர்டிமெஸ் 1 மூலம் இந்த விண்ணோடம் செலுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக அப்பல்லோவின் நிலவு பயணம் இடம்பெற்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி நிறுவனம், ஆர்டிமெஸ் ஆய்வுத் திட்டப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இதில் மனிதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை என்றப் போதும், 2025ஆம் ஆண்டாகும் போது மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.