Tuesday, June 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டாள் தீர்மானங்களால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது - சஜித் பிரேமதாஸ

முட்டாள் தீர்மானங்களால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது – சஜித் பிரேமதாஸ

உரம் தொடர்பான முட்டாள்தனமான தீர்மானத்தினால் தேயிலை உற்பத்தி சுமார் 60 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அதனால் தேயிலை விவசாயிகளுக்கு நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேயிலைக்கான உர மூடையொன்றின் விலை 15,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், தேயிலை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள உரப்பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இன்று பல பிரதேசங்களில் கொள்வனவு செய்வதற்கு கூட உரம் இல்லை என குறிப்பிட்ட அவர், உரங்களுக்கு சலுகைத் திட்டமொன்றை அமுல்படுத்துமாறு யோசனை முன்வைத்தார்.

தரமற்ற களைக்கொல்லிகளை சந்தையில் இருந்து அகற்ற அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles