Friday, December 19, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமார்ச் 20 உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்

மார்ச் 20 உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்

அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் ஆகும்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள்.

உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான புதிய அமர்வுகளை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அதற்குத் தேவையான சட்ட ரீதியான அதிகாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் ஊடாக தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles