Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரட்டை குடியுரிமை சர்ச்சை: சிக்கினார் டயனா கமகே

இரட்டை குடியுரிமை சர்ச்சை: சிக்கினார் டயனா கமகே

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது இலங்கை விசா 2014ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் தகவல்களின்படி, ‘நயனா சமன்மலி’ அல்லது டயனா கமகே என்றழைக்கப்படுபவர் ஒரு பிரித்தானிய பிரஜை எனவும் தெரிவித்துள்ளது.

எனினும், 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் ‘இரட்டைக் குடியுரிமை’ கொண்டவர் அல்ல எனவும், அவர் பிரித்தானியக் குடியுரிமையுடன் சட்டவிரோதமான இலங்கைக் கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

#Hiru News

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles