மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரி மாணவிகள் 40 பேர் இன்று காலை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுகவீனமுற்ற மாணவிகளில் சிலர் நேற்று (14) வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.