ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சுயாதீனமாக செயல்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் தாங்கள் அந்த கூட்டணியில் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளே மற்றும் பிரியங்கர ஜயர்த்ன ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தாங்கள் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினர்களாகவே செயல்படவிருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.