பொலிஸ் அதிகாரி ஒருவர் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை துன்புறுத்தியமை தொடர்பாக பொலிஸ் மாஅதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இன்றைய நாளுக்குள் அந்த அறிக்கை கிடைக்குமென எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை கிடைத்த உடன் சம்பவம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் அதிகாரி ஒருவரால் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மாஅதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.