2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மின்சார வேலிகளை நிர்மாணிப்பதற்கும் பராமரிப்பதற்கும் 45 கோடியே 55 லட்சத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது (455,504,969) ரூபாவை செலவிட்ட போதிலும் யானைகளுக்கும் மனிதகளுக்குமான மோதல் முடிவுக்கு வரவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவிக்கிறது.
மின் வேலிகள் கட்டுதல் மற்றும் பராமரிப்பதற்காக 2019 இல் 197,983,635 ரூபாவும், 2020 இல் 257,521,334 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
இதுவரை 4,756 கி.மீ தொலைவுக்கு மின் வேலிகள் கட்டப்பட்டுள்ளன.
எனினும், இதுவரை யானை-மனித மோதல் தீர்வை எட்டவில்லை என கூறப்படுகிறது.