பிரித்தானிய லிவர்பூல் கால்பந்து அணியை வாங்க இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானி தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஃபென்வே ஸ்போர்ட்ஸ் கோர்ப்பரேஷன் தற்போதைய உரிமையாளருக்கு 4.73 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையாக உள்ளது.
முகேஷ் அம்பானி இந்தியா கால்பந்து அணி ஒன்றினதும், மும்பை இந்தியன்ஸ் அணியினதும் உரிமையாளர் ஆவார்.
அவரது சொத்து மதிப்பு 90 பில்லியன் டொலர்களுக்கு மேல் உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.