பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போனதாக கப்பலின் உரிமையாளர் நேற்று (11) பிற்பகல் முறைப்பாடு செய்துள்ளதாக பேருவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய அமரசிங்க ஆரச்சி நிஷாந்த பிரேமகீர்த்தி டி சில்வா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.