நேற்று எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்ட போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய விலை திருத்தம் தமது தொழிற்துறைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எனவே பேருந்து கட்டணத்தை உயர்த்தமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.