சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை பாரியளவில் அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரங்களில் ஒரு கிலோ 200 ரூபா அளவில் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது 320 ரூபா வரையில் அதிகரித்துள்ளது.
கேள்விக்கு ஏற்ற அளவுக்கு வெங்காய நிரம்பல் இன்மையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறிய வெங்காயத்தின் சில்லறை விலை கிலோ 750 வரையில் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.