Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாருக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள்

கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை பொலிஸாருக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத கைது, பொய் வழக்குகள், தாக்குதல்கள், பாரபட்சம் மற்றும் பொலிஸாரின் செயலற்ற தன்மை என்பவற்றிற்காக இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களுக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 2018ஆம் ஆண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு 127, 764,000 ரூபா வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது 2015ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் இரண்டு மடங்கு அதிகரிப்பாகும்.

#Daily Mirror

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles