Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன பசளை விவகாரம்: இராஜதந்திர ஆதரவை வழங்க வெளிவிவகார அமைச்சு இணக்கம்

சீன பசளை விவகாரம்: இராஜதந்திர ஆதரவை வழங்க வெளிவிவகார அமைச்சு இணக்கம்

சீன சேதன பசளை விவகாரம் தொடர்பில் இராஜதந்திர தீர்வைப் பெற்றுக்கொள்ள வெளிவிவகார அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்ய்பட்ட சீன சேதன உரக் கப்பலுக்கு இலங்கை செலுத்திய 6.7 மில்லியன் டொலர் நிதி தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் விவசாய அமைச்சில் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் தலைமையில், இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

சீன சேதன பசளை தாங்கிய கப்பல் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நிலையை தீர்ப்பதற்காக, வெளிவிவகார அமைச்சின் விசேட அதிகாரி ஒருவரை, வெளிவிவகார அமைச்சர் இதன்போது நியமித்துள்ளார்.

இதுபோன்ற நிலை, மீண்டும் நிகழாதிருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles