நாடளாவிய ரீதியில் 300 சதொச விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க மதுவரி திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மதுவரி அறிவித்தல் பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச விற்பனையகங்களுக்கும் உடனடியாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சதொச விற்பனையகங்களில் மதுபான விற்பனை நிலையங்களை உரிய அனுமதிப்பத்திரங்களை அங்கீகரித்ததன் பின்னர் திறக்கவும் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுபான அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த சில சதொச விற்பனையகங்கள் உரிய தகைமைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் பொதுமக்களின் ஆட்சேபனை காரணமாகவே இந்த அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
