யுக்ரைன் ஜனாதிபதி விளொடிமர் செலக்ஸ்கியை, தாம் சந்திக்க விரும்பவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில், ரஷ்ய ஜனாதிபதியுடன் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கான பணிகளில் இஸ்ரேல் இறங்கியுள்ள நிலையில், குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தாம் யுக்ரைன் ஜனாதிபதியை சந்திக்க போவதில்லை என துருக்கி ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின் போது ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.