பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு அதிகரித்து வருவதாக பொலன்னறுவை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று (10) தெரிவித்தார்.
2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொலன்னறுவை மாவட்டத்தில் இந்த நிலை குறைவாக இருந்ததாகவும் அதன் பின்னர் அதிகரித்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 15 – 20 வீதமாக அதிகரித்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வ. கே. டபிள்யூ. சரத்சந்திர குமாரவன்ச தெரிவித்தார்.
