நேற்று தாம் விளையாடிய விதம் ஏமாற்றமளிப்பதாக இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண இருபதுக்கு20 தொடரில், இந்திய அணியுடன் இன்று இடம்பெற்ற இரண்டாம் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதன் பின்னர் கருத்து வெளியிட்ட இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, துடுப்பாட்டத்தில் இறுதியில் போராடி நல்ல ஓட்ட இலக்கைப் பெற்றபோதிலும், பந்துவீச்சு சரியாக அமையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓர் அணி 16 ஓவர்களில் இந்த இலக்கை எட்டும் அளவுக்கான ஆடுகளம் இதுவல்ல.
இன்று நாங்கள் சரியாகப் பந்துவீசவில்லை.
இதுபோன்ற ஆட்டங்களில் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்வது மிக முக்கியமாகும்.
அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை எவருக்கும் கற்றுத்தர முடியாது.
அது தனிநபரைப் பொறுத்த விடயமாகும்.
ஐ.பி.எல் போட்டியில் நெருக்கடியான தருணங்களை நன்கு எதிர்கொள்கிறார்கள்.
பந்துவீச்சில் நல்ல தொடக்கம் அமையவில்லை.
இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
