Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுசானியா மிர்சா - சோயப் மாலிக் விவாகரத்து

சானியா மிர்சா – சோயப் மாலிக் விவாகரத்து

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் ஆகியோர் விவாகரத்து செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர்.

தனது எல்லை கடந்த காதலனாகிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை கடந்த 2010 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

சானியா மிர்சா கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் வசித்து வருகிறார். இத்தம்பதியினருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

மேலும், மாலிக்கின் பாகிஸ்தானில் உள்ள நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் ‘ஆம்இ அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்’ என்று கூறியுள்ளார்.

சோயப் தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர் எனவும் இருப்பினும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இருவரும் தங்கள் மகன் இஷானின் பிறந்த நாளை ஒன்றாக கொண்டாடினர். சோயிப் இன்ஸ்டாகிராமில் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாலும்இ சானியா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles