சஜித் ஜனாதிபதியாகி இருந்தால் நாடு தற்போது சோமாலியாவாக மாறி இருக்கு என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வழமைப்போன்று கஞ்சா வளர்ப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.
அத்துடன், நாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் ஏனையோரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என கோரினார்.
சஜித் பிரேமதாச பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதாகவும், மக்களையும் கூட்டிக்கொண்டு இனி வீதியில் இறங்க வேண்டாம் எனவும் டயனா கமகே கோரினார்.