Saturday, December 27, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி பெண் பலி

காட்டு யானை தாக்கி பெண் பலி

அம்பாறை – ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

இரண்டு பிள்ளைகளின் தாயான கந்தையா ஷோபனா (32) என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

அதிகாலை வேளையில் காட்டுயானையினால் வீடு உடைக்கப்படும்போது, தமது பிள்ளைகளை காப்பாற்ற முயற்சித்த வேளை குறித்த பெண் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளாதாக விசாரணையில் தெரியவந்தள்ளது.

அத்துடன், காட்டு யானையின் தாக்குதலில் கண்ணகி கிராமம் பகுதியில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles