ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இதன்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக இப்போதேனும் தீர்க்க வேண்டும் என கருதுவதாக கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அடுத்தவாரம் வடக்கு ஆPகளை சந்தித்து வடக்கிலுள்ள மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளேன்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கு மேலதிக குழுக்களை நியமிக்க எதிர்ப்பார்க்கிறேன். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் பயங்கரவாத தடை சட்டத்துக்கு மாற்றீடான சட்டம் தொடர்பான பிரேரணைகள் அடுத்தாண்டு ஆரம்பத்தில் முன்வைக்கப்படும்.
பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயங்களை ஆராய்ந்து கலந்துரையாடி உடனடியாக தீர்க்க வேண்டும் என்றார்.