பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் முழுமையாக அரசியல் யாப்புக்கு அமைவானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட நிலையில் சபாநாயகர் இதனை இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.