அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனொருவர் தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயின்ற வீ.அஜன்தன் என்ற மாணவன் டெங்கு நோய் தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியானது.
இதில் குறித்த மாணவன் 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.