உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்து வருகிறது.
இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1714.09 டொலர்களாக உயர்ந்துள்ளது – இது 1.64 டொலர் அதிகரிப்பாகும்.
அதேநேரம் கொழும்பு செட்டியார்த் தெருவிலும் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தற்போது 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 171,500 ரூபாவாக நிலவுகிறது.
அதேநேரம் 22 கரட் தங்கம் பவுண் 157,000 ரூபாவாக விற்பனைச் செய்யப்படுகிறது.